Advertisment

திமுகவில் பஞ்சம்... நேற்று வந்தவருக்கு முக்கிய பதவி... அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அண்மையில் அமமுகவில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மிக முக்கிய பொறுப்பான கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியுள்ளது திமுக.

Advertisment

இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

 Famine in the DMK... Minister Jayakumar

திமுகவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. திமுகவில் பல கசப்புகள் உள்ளது என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது. அந்த கட்சிக்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்கள் பலர் இருக்கின்ற நிலையில் நேற்று வந்தவருக்கு முக்கிய பதவி கொடுத்திருப்பது அங்கு ஏதோ மனக்கசப்பு உள்ளதையே காட்டுகிறது. பாகிஸ்தான் ஆக்குபை காஷ்மீர் என்பதை போல திமுக ஆக்குபை அதிமுக என்ற நிலைதான் உள்ளது. எங்கள் கட்சியில் இருந்து வந்தவருக்கு முக்கிய பதவி தரும் அளவிற்கு திமுகவில் ஆட்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.

admk jayakumar Thangatamilselvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe