s

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisment

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை தினமும் 3 ஆயிரத்தைக் கடந்து அதிகரித்து வருகின்றது. பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இதுதொடர்பாக பேசியதாவது, "ஒருவருக்கு கரோனா உறுதியானால் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். கரோனா முடிவு வரும் வரையில் பரிசோதனை செய்தவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.