ஈரோடு எஸ்பி அலுவகத்திற்கு இன்று பங்களா புதூரை சேர்ந்த சீலான் 25 வயது என்பவர் தனது தாய், சகோதரி மற்றும் சகோதரி மகன் ஆகிய 4 பேருடன் மனு கொடுக்க வந்தார்.

Advertisment

அப்போது சீலானின் தாய் மற்றும் அவரது சகோதரி இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்னை கேனை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களின் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி பறித்தனர்.

Advertisment

 Family Threatened by minister karupannan supporters

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் எஸ்பி அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு நிலவியது.

Advertisment

பின்னர் சீலான் எஸ்.பி சக்தி கணேசனை சந்தித்து மனு அளித்தனர். அதன் பிறகு அவர்கள். நாங்கள் பங்களாபுதூர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நான் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறேன்.

எனக்கு நாலு வருடத்திற்கு முன்பு பள்ளி பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் என் மனைவியை பிரிந்து விட்டேன்.இந்நிலையில் எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. எனக்கு சொந்தமாக பங்கள புத்தூரில் வீடு உள்ளது. அந்த வீட்டில் தான் நானும்எனது குடும்பத்தாரும் வசித்து வருகிறோம்.

இந்நிலையில் எனது முதல் மனைவி வீட்டில் உரிமை உரிமை உள்ளது என்ற பிரச்சனை செய்து வந்தார். இந்த பிரச்சனையை அ.தி.மு.க அமைச்சர் கருப்பணனுக்கு வேண்டப்பட்டவரான கட்சி நிர்வாகி செந்தில் என்பவர் கட்டப் பஞ்சாயத்து செய்து எங்களை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டார். இது தொடர்பாக பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை." என்றனர்.

அ.தி.மு.க.அமைச்சர் K.C கருப்பண்ணனின் ஆட்களால் கட்டப் பஞ்சாயத்து செய்யப்பட்டு ஒரு குடும்பம் தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.