Advertisment

மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை இறப்பு; கண்ணீர் வடிக்கும் குடும்பம்

family sheds tears after passed away of a raging bull in a Manjuvirattu

Advertisment

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அக்ராவரம் கிராமத்தைச்சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். இவர் ஸ்டார் வீரா ராணி என்ற பெயர் வைத்த காளையை வளர்த்து வந்தார். இந்த காளைக்கு மூன்று வயதானதில் இருந்து மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துகொள்ளச் செய்தனர்.

முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பலமுறை அதனை யாரும் பிடிக்க முடியாத காளையாக வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுத்தந்தது. இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி காளை உடல் நலக்குறைவால் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் திடீரென இறந்தது. குடும்பத்தில் ஒருவராக வளர்ந்த காளை இறந்ததைத்தொடர்ந்து குடும்பமே கண்ணீர் விட்டு அழுதனர்.

இறந்த காளையை அடக்கம் செய்தனர். இந்நிலையில் இன்று ஸ்டார் வீரா ராணி இறந்ததை சுரேஷ் குடும்பத்தார் மற்றும் அவரது நண்பர்கள், காளைக்கு சில அடி உயரம் போட்டோ பிரேம் செய்து மாலை அணிவித்துபல வகை உணவுகள் படைத்துதுக்கம் அனுசரித்தனர். காளைக்கு காரியம் செய்ததைஅப்பகுதி மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe