/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/467_1.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகில் உள்ள கீழ்பாடி கிராமத்தைச்சேர்ந்தவர் அண்ணாமலை (65).இவருக்கும் இவரது மகன் அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கும் சொத்து பிரிப்பதில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. அந்த வகையில்கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி தந்தை மகன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்தந்தை அண்ணாமலை மகன் அலெக்ஸ் பாண்டியனைபலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ரிஷிவந்தியம் போலீசார் அண்ணாமலையை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அண்ணாமலைக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அண்ணாமலை வீட்டிற்கு வந்த பிறகு யாருடனும் பேசாமல் கோபத்தில் மகனை கொன்று விட்டோமே என்று பெரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (29.3.2022) மதியம் 2 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரிஷிவந்தியம் போலீசார் தற்கொலை செய்து கொண்ட அண்ணாமலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனை கொன்ற தந்தை மன உளைச்சலில்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரிஷிவந்தியம் பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)