Advertisment

நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரத்தைசேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் அய்யப்பன் (38) 2003 பேட்ஸைசேர்ந்த போலீஸ் காவலர். தற்போது தென்காசி மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சிக் காவல் நிலையத்தில் ஏட்டாகபணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா. தம்பதியருக்கு அஜய், விஜய் என இரு மகன்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ஆழ்வார்குறிச்சியில் வசித்து வருகிறார்.

நேற்று காலை அய்யப்பன் வீட்டிலுள்ள பாத்ரூமிற்குசென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால் பதை, பதைத்த குடும்பத்தினர் பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அய்யப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் போய் ஸ்பாட்டுக்கு வந்த கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, அய்யப்பனின் உடலைகைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தவர், அய்யப்பனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisment

ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இன்றிக் குறைவான காவலர்களுடன் இயங்கிவருவதால், 12 பேர் மட்டுமே மொத்தபணியைகவனிக்க வேண்டிய நிலை. 60 கிராமங்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே கரோனா ஊரடங்கு காரணமாக அய்யப்பன் உட்பட அனைத்துபோலீசாரும் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் உள்ளனர் என்றும் சொல்கின்றனர். மேலும் அய்யப்பனுக்கு இந்தப் பிரச்சனையோடு அவருக்கு குறைந்த அளவு ரத்த அழுத்தப் பிரச்சனையுமிருந்திருக்கிறது. இதுதவிர அவருக்கு ஓய்வும் அவ்வளவாகக் கிடையாதாம். எனவே மரணத்திற்கான காரணம்தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறதுஎன்கிறார்கள்.