Advertisment

கொலை வழக்காக மாறிய குடும்ப தகராறு!

Family dispute turns into murder case

திருச்சி அரியமங்கலம் பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவர் தம்பி வெங்கடேசன் அரியமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 1ஆம் தேதி அண்ணன் கார்மேகம் வீட்டுக்கு வெங்கடேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் கார்மேகத்தைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.

Advertisment

அப்போது அருகில் இருந்த இரும்பு கதவில் மோதியதால் கார்மேகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து கார்மேகத்தை உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி அரியமங்கலம் காவல்துறையினர் வெங்கடேசனைக் கைது செய்தனர்.

Advertisment

alt="ads" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b54fa7f0-a265-4472-86c4-711a2dcf84d4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_160.jpg" />

family problem trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe