Skip to main content

குடிப் பிரச்சனையால் குடும்பத்தில் தகராறு; ஈரோட்டில் நிகழ்ந்த இரு வேறு தற்கொலைகள்

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

nn

 

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் இரு வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு சித்தோடு அடுத்த மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயரத்தினம் (52). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார்

 

ஜெயரத்தினம் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயரத்னத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவியும், இளைய மகளும் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக் கொண்டு ஜெயரத்தினம் வீட்டுக்கு வராமல் அவரது அக்கா வீட்டில் தங்கி வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து மனைவி, மகளை பார்த்து சென்றுள்ளார்.

 

சம்பவத்தன்று ஜெயரத்தினம் திடீரென களைக்கொல்லி பூச்சி மருந்து எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயரத்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதைப்போல் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தொட்டிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் திலக்குமார் (38).இவரது மனைவி சுதா. திலக்குமார் அரிசி வியாபாரம் மற்றும் கறிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போதெல்லாம் திலக்குமார் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கையில் ஒரு விஷ மருந்தை வைத்து கொண்டு மிரட்டி வந்துள்ளார்.

 

நேற்றும் இதேபோல் திலக்குமார் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் தான் கையில் வைத்திருந்த விஷ மாத்திரையை எடுத்து விழுங்கி விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திலக்குமாரை சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே திலக் குமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்