Advertisment

மதுவால் ஏற்பட்ட குடும்ப தகராறு; வடமாநில இளைஞர் தற்கொலை

A family dispute caused by alcohol

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம் சந்த்கபீர் நகரைச் சேர்ந்தவர் ரங்கிலால். இவருடைய மகன் துளசி (வயது 22). தொழிலாளி. இவர் தனது மனைவி பூஜா மற்றும் 2 குழந்தைகளுடன் ஈரோடு பெரியவலசு மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். துளசிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு துளசி குடிபோதையில் வீட்டுக்குச் சென்றார். அவரை பூஜா கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த துளசி சமையல் அறைக்குச்சென்று தூக்குப் போட்டுக் கொண்டார். அவரை பூஜா மற்றும்அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே துளசி உயிரிழந்து விட்டதாகத்தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe