விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இருளர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரை பொய் வழக்கில் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பல்வேறு இடங்களில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இன குடும்பத்தினர், சித்தலிங்கவடம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் குமார், ராமச்சந்திரன், பாண்டியன் ஆகிய மூன்று பேரையும் கடந்த மார்ச் 1- ஆம் தேதி அன்று கோயில் திருட்டு தொடர்பான வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போது அவர்கள் பணியில் இருப்பதாகவும், குறிப்பிட்ட கோயில் 60 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும் கூறும் குடும்பத்தினர், பொய் வழக்கில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.