Advertisment

கல்குவாரி வெடிவிபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிவாரணம்!

family of deceased in quarry accident, Rs. 12 lakhs was provided by Quarry Management

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழஉப்பிலுகுண்டு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது, வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கல்குவாரியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மதுரை, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். இதனிடையே குவாரி உரிமையாளர் சேதுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இன்று காலை வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் குவாரி நிர்வாகம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. ரொக்கமாக ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சம் உயிரிழந்தவர்களின் குடுமத்தினரிடம் வழங்கப்பட்டது.

Virudhunagar quarry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe