Family conflict trichy one injured

திருச்சி திருவானைகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் தன்னுடைய தங்கை விஜயலட்சுமியை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது தங்கை விஜயலட்சுமி இறந்த நிலையில், சந்துருவின் மனைவிக்கும், சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு தன்னுடைய ஒரு மகனுடன் அவர் சிவகுமாருடன் கடந்த 2 வருட காலமாக சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு தன்னுடைய மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி ஆத்திரத்தில் அவரை துரத்தித்துரத்தி வெட்ட முயற்சி செய்துள்ளார். இதில் லேசான காயங்களுடன் சிவகுமார் தப்பித்துள்ளார்.

Advertisment

பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், கொலை செய்ய முயன்ற சந்துரு மீது ஏற்கனவே திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.