/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erode_41.jpg)
ஈரோடு மாவட்டத்தில் சொத்து பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கை கலப்பில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருக்கு தர்மலிங்கம் மற்றும் மகேந்திரன் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி தனி தனியே குடும்பம் உள்ளது. இதனிடையே, இந்த இருவரும் சேர்ந்து தொழில் ஒன்றை செய்து வந்தனர். இந்த நிலையில், அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள் குடியிருந்த வீட்டை அடமானம் வைத்து கோவிந்தராஜன், அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்கள்என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த வீடு தொடர்பாக சகோதர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், தர்மலிங்கம் குடும்பத்தினருடன், மகேந்திரனின் மாமனாரும், அவரது ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் கை கலப்பில் முடிந்துள்ளது. மேலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்ற பெண்களின் தலைமுடியை பிடித்தும் சண்டை போடத் தொடங்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)