/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_534.jpg)
கோவைசெல்வப்புரத்தைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையைச் சேர்ந்தஇளைஞரைக்கடந்த ஆறுவருடங்களாகக்காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே நெருக்க அதிகமானதால் அடிக்கடி சந்தித்துதனிமையில் இருந்துள்ளனர். அதன் காரணமாக இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனைத்தொட்ர்ந்துதிருமணம்செய்துகொள்ளுமாறு காதலனை அந்த பெண் வற்புறுத்தி வந்துள்ளார். இது காதலனின்வீட்டிற்குதெரியவர, அவரது பெற்றோர்கருவைக்கலைத்தால் தனது மகனுடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இளைஞரின் பெற்றோர் சொன்னதை நம்பி தனது வயிற்றில் வளர்ந்த கருவை அந்த பெண் கலைத்துள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.இதானல்மனவேதனை அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் புகார் மீதுபோலீசார்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கண்ணீர்மல்ககோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இளம்பெண், “காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இளைஞர் என்னை ஏமாற்றி விட்டார். எனது நிலைகுறித்துக்காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் காதலித்த இளைஞர் என்னையும், எனது குடும்பத்தையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து புகார் அளித்தாள் இருவரும் காதலித்த காலங்களில் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளங்களில்வெளியிட்டுவிடுவதாக மிரட்டுகிறார்.இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுக் கொடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)