Advertisment

லஞ்சம் கொடுக்க பிச்சை கேட்ட குடும்பத்தினர்!

Family begging for bribes

Advertisment

வருவாய்த் துறை என்றாலே அதன் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறதோ இல்லையோ அதில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு லஞ்சம் என்கிற வருவாயை அள்ளிக் கொடுக்கும் துறையாக இருக்கிறது. ஏழை, எளிய மக்களை கூட அவர்கள் விடுவதில்லை என்பதை உணர்த்துகிறது இச்செய்தி.

ஈரோடு மாவட்டம், அந்தியூரையடுத்துள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி பிரியா, சென்ற பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வாரிசு சான்று கேட்டு மாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.

விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர், பணம் ரூபாய் 3000 கேட்டதாகக் கூறப்படுகிறது. தங்களால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக ப்ரியாவின் மாமியார் ஜோதிமணி மற்றும் இரண்டு குழந்தைகளும் 50க்கும் மேற்பட்ட முறை மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வாரிசு சான்று வேண்டியும் அதன் நிலை குறித்தும் கேட்டு வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்று வழங்க முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறியதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க வேறு வழியில்லாமல் இறந்துபோன பிரியாவின் மாமியார் ஜோதிமணி, மகள்கள் கனிகா, யோகா ஸ்ரீ ஆகியோர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கையில் பதாகைகளை ஏந்தி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மாத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு பணம் கொடுப்பதற்காக பிச்சை கேட்டு தரையில் அமர்ந்தனர்.

மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் தொடர்ந்து லஞ்ச பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் பொதுமக்கள் வட்டாச்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தரப்பிடம் கேட்டபோது, பொதுமக்களிடம் இருந்து வரும் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படுகிறது. புகார் அளிக்கும் அளவுக்கு எந்த தவறும் இங்கு நடக்கவில்லை என்றனர்.

கிராம நிர்வாக அலுவலருக்கு பணம் கொடுப்பதற்காக தாலூகா அலுவலகம் முன்பு அமர்ந்து இந்த குடும்பத்தினர் பிச்சை கேட்டது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe