விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வரும் ஜீவா என்ற மாணவனின் தந்தை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
தற்போது மாணவரின் தாயாருக்கும், பாட்டிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தனிமையில் தவித்து வரும் அம்மாணவனுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக உடை, அரிசி, காய்கறி, மளிகை பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும், உதவி தொகையையும் வழங்கினார்.
மேலும் பள்ளி திறந்தவுடன் அம்மாணவனுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைவாக செய்துதரப்படும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி அளித்துள்ளார்.