ஆர்.கே நகரில்நடந்த மோதல் சம்பவத்திற்குதினகரனுக்கு எதிராக மக்கள் கொண்ட எதிர்ப்பின் வெளிப்பாடே காரணம்எனமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்கூறியுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காஞ்சிபுரம் வாணியஞ்சாவடியில் செய்தியாளர்களை சந்தித்தமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் என 20 ரூபாய் டோக்கனை வழங்கிமக்களை ஏமாற்றி வஞ்சித்து வெற்றிபெற்ற தினகரனிடம் மக்கள் அந்த பணத்தை எதிர்பார்கின்றனர். அப்படிபட்ட நிலையில்அவர்தொகுதி பக்கமும் வருவதில்லை. சட்டமன்றத்திற்கும் வருவதில்லை.
இன்று தொகுதி மக்களை பார்க்கச்சென்ற பொழுது பொதுமக்களாய் ஒன்று சேர்ந்து இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வாரத்திற்கு ஒருமுறை தொகுதிப்பக்கம் வருவதாக கூறி ஏமாற்றினார். அதைத்தான் மக்கள் கேட்கிறார்கள், தொகுதிக்கு வாரம் ஒருமுறை வருவேன் என்று சொன்னீர்களே?, குறைக்களை தீர்ப்பேன் என்று சொன்னீர்களே?, பணம் தருகிறேன் என்று சொன்னீர்களே? என கேட்கிறார்கள். இப்படி மக்கள் கோவம்தான் மோதலாக உருவாகியுள்ளதுஇதற்கும்அதிமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறினார்.