வீழ்ந்த தேங்காய் விலை... தேங்காயை உடைத்து விவசாயிகள் போராட்டம்!

Falling coconut prices ... Farmers struggle to break coconuts!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்தும், விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன் வர வலியுறுத்தியும் சாலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் பெருமாள் தலைமையில் ஏராளமான தென்னை விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர் அய்யம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் தொடங்கி சித்தரேவு பிரிவு வரையிலான சாலையில் வழி நெடுகிலும் தேங்காய்களை உடைத்த வண்ணம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 140 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பச்சை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தின் போது சாலை நெடுகிலும் உடைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய்களை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.

Farmers struggle
இதையும் படியுங்கள்
Subscribe