கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் புதுப்பேட்டை கிராமத்தில் அல்-மதினா கம்ப்யூட்டர் சென்டரில் அரசு அனுமதியின்றி போலியாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகள் தயார் செய்து, போலியாக வாக்காளர் பதிவு அலுவலரின்கையொப்பம் இட்டு வழங்குவதாக தகவல்கள் வெளியானது.

Fake voter, Aadhaar and ration cards as bundles of bundles; One arrested!

Advertisment

இதனையடுத்து ஜெகதீஸ்வரன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தாரகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து புதுப்பேட்டை கோட்லாம்பாக்கத்தில் ஷேக்பரீத் என்பவர் நடத்தி வந்த அல்-மதினா கம்ப்யூட்டர் சென்டரில் சோதனை செய்ததில், பண்டல் பண்டலாகPVC கார்டில் பிரிண்ட் எடுத்து, வாக்காளர் அடையாள அட்டையில் தேர்தல் பதிவு அலுவலர் என்ற இடத்தில் கையொப்பத்தை போலியாக பதிவு செய்தது தெரியவந்தது.

Advertisment

Fake voter, Aadhaar and ration cards as bundles of bundles; One arrested!

அதையடுத்து ஷேக்பரீத் (46) என்பவரை கைது செய்ததுடன் கம்யூட்டர், மற்றும் போலி அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் போலீசார்.