Advertisment

எம்.எல்.ஏ. பெயரில் பணம் வசூலிக்க முயற்சி செய்த மோசடி கும்பல்

fake social media account create collect money in mla name  

முக்கியப் பிரபலங்களின் பெயரில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகளைத்தொடங்கி அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்து வரும் சம்பவங்கள்தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Advertisment

இந்நிலையில், திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் தொகுதிதிமுக எம்.எல்.ஏ. கதிரவன் பெயரில் போலியாகத்தொடங்கப்பட்டுள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள்மூலமாக பலரிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையறிந்த எம்.எல்.ஏ. கதிரவன், "யாரிடமும் இது போன்று நிதி கேட்டு நான் குறுந்தகவல்கள் எதுவும் அனுப்பவில்லை. பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் யாரும் தனது பெயரில் இயங்கி வரும் சமூக வலைத்தளபோலிக் கணக்குகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அரசியலில் பிரபலமாக உள்ள ஒருவரின் பெயரில் மோசடியாக பணம் வசூல் செய்ய முயற்சித்தது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe