Advertisment

மாந்திரீகம் செய்வதாக ஏமாற்றி வந்த போலி சாமியார் கற்பழிப்பு வழக்கில் கைது

திண்டிவனத்தில் மாந்திரீகம் செய்வதாக ஏமாற்றி வந்த போலி சாமியார் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் கைதானார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கின்ற செல்வமணி (40). இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமம் ஆகும். இவருக்கு திருமணமாகியுள்ள நிலையில் இவருடன் மனைவி சேர்ந்து வாழவில்லை என கூறப்படுகிறது.

Advertisment

Tindivanam police Arrested

இந்நிலையில் இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் நீக்குவதாக கூறி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களான பாதிரிராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்சென்று பல்வேறு நபர்களிடம் மாந்திரீகம் செய்வதாகவும்,பில்லி சூனியம் வைப்பதாகவும் கூறி கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் எடுப்பது போன்று பலரின் வீடுகளுக்குசென்று பலரது வீட்டு பெண்களை கவர்ந்து தன்னுடன் வைத்து அவ்வவப்போது சில காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.அதன் பின்னர் அடுத்த குடும்பத்தை கணவரிடம் இருந்து மனைவியை பிரித்துதன்வசமாக்கி சிறிதுகாலம் குடும்பம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதே போன்று மாந்திரீகம் செய்வதாக கூறி போலி சாமியாராக பல பேரை ஏமாற்றி வந்த செல்வமணி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம், வடமலைப்பாக்கம் கிராமத்திற்கு இதே போன்று மாந்திரீகம் செய்வதற்குவந்த அழைப்பின் பேரில் சென்ற அவர் அங்கிருந்த கருணாகரன் என்பவரின் மகளுக்கு ஏற்பட்ட காதலை பிரித்து தருமாறு அவர்களின் பெற்றோர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இந்த ஊரில் கோயில் கட்டுவதினால் இங்கிருந்தால் உங்க பெண்ணுக்கு ஆகாது என்று கூறி தனது வீட்டுக்கு மைனர் பெண்ணாண வடமலைப்பாக்கம் கருணாகரனின் மகளை அழைத்து வந்துள்ளார்.கடந்த ஒரு வருடங்களாக தன்னுடன் வைத்து படிக்க வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் இருந்த பெண்ணுக்கு 19 வயதான பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தி உள்ளார். இந்நிலையில் அப்பெண் ஒத்துழைக்காத நிலையில் தன்னுடன் தற்போது வாழ்ந்து வரும் மற்றொருவரின் மனைவியான ஹேமாவின்(40) உதவியோடுகடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் 19 வயதான கருணாகரனின் மகளைபாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண் போலி சாமியார் தன்னை சீரழித்தது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்த செல்வமணி என்கின்ற மணியையும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஹேமா என்பவரையும் கைதுசெய்தனர்.

arrested police Tindivanam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe