/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_142.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்த்(37). இவர் ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளன. இவருடைய வீட்டின் அருகே உள்ள அய்யனார் கோவிலுக்கு சின்னசேலம் போயர் தெருவைச் சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி வந்து வழிபட்டு செல்லுவார் எனத் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் பில்லி, சூனியம், பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் சாமியார் வேடம் அணிந்து செய்வார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஆனந்துக்கும், முத்தையாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆனந்துக்கு பணம் நெருக்கடி ஏற்படவே தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையாவிடம் ஆனந்த கிரையம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நாளடைவில் ஆனந்தின் குடும்பத்தாரிடம் முத்தையாவிற்க்கு பழக்கம் அதிகம் ஆனதால் ஆனந்தின் மனைவிக்கும், முத்தையாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் ஆனந்துக்கு தெரிய வரவே இருவரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மேல் முத்தையாவுடன் பழக்கம் வைத்திருந்தால் நம் குடும்பத்திற்க்கு ஆபத்து எனக் கருதிய ஆனந்த் முத்தையாவுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் சேர்த்து ரெடி பண்ணி எனது நிலத்தைத் திரும்பத் தர வேண்டும் என ஆன கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தையா உனது நிலத்தை திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரவிவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் முத்தையாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முத்தையாவின் லேப் டப்பை சோதனை செய்த போது அதில் பல பெண்களுடன் தனிமையில்இருந்த 50க்கு மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த ஐந்து செல்போன்கள், ஒரு லேப்டாப் ஐந்து பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பின்னர் முத்தையா மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)