Skip to main content

அமாவாசையில் இரவு பூஜை; தாயின் கண்முன்னே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

Fake preacher arrested under POCSO Act in Ramanathapuram
சாமியார் ராமகிருஷ்ணன்

 

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன்(பெயர் மாற்றப்பட்டது). 36 வயதான இவர், சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். அர்ஜுன், ஊஞ்சலை பகுதியை சேர்ந்த செல்வகுமாரி(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு  10 வயது மகன், 8 வயது மகள் என இரு குழந்தைகள் இருக்கின்றன.

 

இந்நிலையில், அர்ஜுனின் மனைவி செல்வகுமாரி, திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவரிடம், தனது கணவருக்கு சரியான வேலை அமையவில்லை என குறி பார்க்கச் சென்றுள்ளார். அப்போது செல்வகுமாரிக்கும் மாந்திரீக சாமியார் ராமகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமியார் ராமகிருஷ்ணனைப் பார்க்க அடிக்கடி சென்றுவந்த செல்வகுமாரி அவரிடம் தொடர்ந்து குறி பார்த்துள்ளார்.

 

இந்நிலையில், அந்த மாந்திரீக சாமியார் ராமகிருஷ்ணன், செல்வகுமாரியிடம் ரசமணி ஒன்றைக் கொடுத்து, இதை கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் நீ கோடீஸ்வரி ஆகிடலாம். உன்னுடைய குடும்பப் பிரச்சனை தீரும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் உன்னுடைய 8 வயது மகளுக்கு, அமாவாசை இரவு சிறப்பு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என ஆசை வார்த்தைகளால் செல்வகுமாரியை வசியம் செய்துள்ளார். இதை உண்மையென நம்பிய செல்வகுமாரி காரைக்குடி, மானகிரி காட்டுப் பகுதியில் உள்ள மாந்திரீக சாமியாரின்  ஆசிரமத்திற்கு, தனது 8 வயது மகளை அழைத்துச் சென்றுள்ளார். அன்றைய இரவு அமாவாசை பூஜையில், அந்த அப்பாவி 8 வயது சிறுமியை, நிர்வாணமாக அமர வைத்த மாந்திரீக சாமியார், ஈவிரக்கமின்றி அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

 

இதற்கு அவரின் தாய் செல்வகுமாரியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்ததை தந்தையிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தந்தை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில்  புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திருப்பத்தூர் எஸ்.பி. ஆத்மநாபன், இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், போலி மாந்திரீக சாமியார் ராமகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் செல்வகுமாரி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

 

தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு பெற்ற தாயே துணைபோன சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேளச்சேரி விபத்து; கட்டுமானப் பணி மேற்பார்வையாளர்கள் கைது

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Construction supervisors arrested due to Velachery container accident

சென்னை கிண்டி 5 பார்லாங் சாலை - வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்தக் கட்டுமான பணிகளில் ஈடுபடுவர்கள் தங்கிக் கொள்ள வசதியாக ஒரு கண்டெய்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஊழியர்கள் தங்கி பணிகளையும் மேற்கொண்டுவந்தனர்.

கடந்த 3ம் தேதி முதல் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய துவங்கியது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் மழை நீர் அதிகம் தங்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியது. அதேபோல், அதி கன மழை பொழிவு இருக்கும் என்பதால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அந்தக் கட்டுமான பணிகளின் பணிதள பொறியாளர் ஜெயசீலன் என்பவர் அங்கு சென்றிருந்தார். இவர் 4ம் தேதி அதிகாலை நேரத்தில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த 50 அடி பள்ளத்தில் நீர் முழுவதுமாக தேங்கி இருந்தது. தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக திடீரென அந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கண்டெய்னரும் அந்த பள்ளத்தில் விழுந்தது. அந்தக் கண்டெய்னரில் பொறியாளர் ஜெயசீலன், அருகே அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவந்த நரேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். மேலும், அவர்களுடன் மூவர் அங்கு இருந்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் அந்த 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக மூவரை மீட்டனர்.

இதில், ஜெயசீலன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரையும் மீட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும்  தொடர்ந்து நான்கு நாட்களாக மீட்பதற்கு போராடி வந்தநிலையில், இன்று காலை நரேஷ் என்பவரை பிணமாக மீட்டனர். தற்போது அந்த பள்ளத்தில் இருந்த மொத்த நீரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மண்ணில் புதைந்திருந்த கண்டெய்னரை மீட்ட மீட்பு படையினர், அதில் இருந்து ஜெயசீலனை பிணமாக மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த பொறியாளர் ஜெயசீலனுக்கு 11 மாதங்கள் முன்பு திருமணம் முடிந்து, தற்போது அவரது மனைவி ஒன்றரை மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கட்டுமான மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ், ஆகிய இருவரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மழைக் காலங்களில் வேலையை நிறுத்தாமல், வேலை ஆட்களை அங்கே ஏன் இருக்க வைத்தீர்கள் என்று இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கருவாடை வாரி இறைத்த அதிகாரி; மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

The tragedy of a disabled woman in sayalkudi

 

ராமநாதபுரம் சாயல்குடி அருகே கருவாட்டு கடை வைத்திருந்த பெண் மாற்றுத்திறனாளியை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசி, விற்பனைக்கு வைத்திருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வந்த நிலையில் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். வார சந்தையில் ஒரு சில கடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சியின் செயல் அலுவலர் சேகர் என்பவர் ஆய்வு செய்தார். அப்பொழுது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அந்த பகுதியில் கருவாட்டு கடை வைத்திருந்தார். கடையை அகற்றும் படி சொன்ன அலுவலர் சேகர், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மாற்றுத்திறனாளி பெண்ணை தரக்குறைவாக திட்டியதோடு, விற்க வைக்கப்பட்டிருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசினார்.

 

இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தட்டிக் கேட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தரை குறைவாக நடந்துகொண்ட அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.