Advertisment

பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை; போலிசாமியாருடன் தாய் போக்சோவில் கைது

Fake preacher and young woman both arrested under POCSO Act

Advertisment

பெற்றகுழந்தைகளைபோலி சாமியாருடன் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாய் மற்றும் போலிசாமியார் இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஓடைக்கால் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்புளிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரிக்கும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு ஆண்குழந்தையும், எட்டு வயதில் ஒரு பெண்குழந்தையும் உள்ளன. உள்ளூரில் சரிவர வேலை கிடைக்காததால் அர்ஜுன் சென்னையில் வேலை செய்து வீட்டுக்கு பணம் அனுப்பி வருகிறார். அந்தப் பணம்போதாது என்றும்இன்னும் அதிகப் பணம் வேண்டும் என்றும்பேராசையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்செல்வகுமாரியிடம், திருப்பத்தூரில் உள்ள சொக்கலிங்கம் சுவாமிகள் சித்தர் பீடம் ஒன்று உள்ளது. அங்கு சென்று பரிகாரம் செய்தால் செல்வம் செழிக்கும் என பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்துஅந்த சித்தர் பீடத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்ற சாமியாரிடம் பரிகாரம் பெறுவதற்காக அவரைஅடிக்கடி சந்தித்துவந்துள்ளார். அப்போது சாமியார், செல்வகுமாரியிடம்பரிகார பூஜை செய்யவேண்டும் எனக் கூறி காரைக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் உறவுகொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில்ஒருநாள்செல்வகுமாரி சாமியார் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். அன்று இரவு மூவரும் சாமியார் ராமகிருஷ்ணன் வீட்டிலேயேதங்கிய நிலையில், சாமியாருடன் சேர்ந்து செல்வகுமாரி தனது குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். அத்துடன் தன் பிள்ளைகள் கண்முன்னே சாமியாருடன் செல்வகுமாரி தனிமையில் இருந்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து, தகவல் அறிந்த கணவர் அர்ஜுன் சாமியார் குடியிருந்து வரும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் சாமியார் மற்றும் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமீபத்தில் கேரளாவில் செல்வம் செழிக்க வேண்டி பெண் ஒருவர் இரு பெண்களை நரபலி கொடுத்ததுடன், சாமியாருடன் தனிமையில் இருந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது பெற்ற குழந்தைகள் கண் முன்னே போலி சாமியாருடன் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POCSO police sivagangai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe