பயிற்சி ஐ.பி.எஸ் என சீருடையில் சிக்கிய போலி போலீஸ் அதிகாரி! ஏற்கனவே சிங்கம் சூர்யா கெட்டப்பில் பல பெண்களை மயக்கியது தெரியவந்தது! 

சென்னை கிழக்கு கடற்கரையில் உண்மையான காவல் அதிகாரி போலபொலேரோ வாகனத்தில் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி என கூறிக்கொண்டு போலீஸ் சீருடையில் உலாவந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

fake police

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சென்னை அயனாவரம் பழனியாண்டவர் தெருவை சேர்ந்தவர் பாலமணிகண்டன் இவர் போலீஸ் வாகனம் என பெயர் எழுதிய பொலேரோ வாகனத்தில் போலீஸ் சீருடையில்சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வலம்வந்துள்ளார் மேலும் தன்னை பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி என கூறிக்கொண்டு பல நிறுவனங்கள், கடைகளில் வசூல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளார்.

fake police

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதுபற்றி அறிந்த கானத்தூர் போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் போலீஸ் அதிகாரிபோல்பாலமணிகண்டன் ஏமாற்றிவந்தது தெரியவந்தது. மேலும்இந்த நபர் ஏற்கனவே 2014-லில்போலீஸ் அதிகாரி எனக்கூறி பெண் மருத்துவர், கல்லூரி இளம்பெண், பொறியாளர் என ஒன்பது பேரை ஏமாற்றிதிருமண செய்து நகை பணம் போன்றவற்றை பறித்த வழக்கில் குண்டர் சட்டத்தில்கைது செய்யப்பட்டவர் என்பதையும் போலீசார் சுட்டிக்காட்டினர். சூர்யா, பாலா இப்படி பல பெயர்களில் நடமாடியவர் எனவும் தெரியவந்தது.

இணையதளங்களில் சிங்கம் சூர்யா கெட்டப்பில் மீசை எல்லாம் வைத்துபோலீஸ் அதிகாரி போல பல பெண்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றிய பாலமணிகண்டன் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் இதுபோன்ற ஏமாற்று சம்பவங்களில் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டு விரிவானவிசாரணை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

Chennai Fake police
இதையும் படியுங்கள்
Subscribe