Advertisment

போலீஸ் போல் நடித்து வழிப்பறி செய்தவரை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் ரோஷனை பகுதியில் கடந்த 10 ஆம் தேதி அன்று உள்ள மேம்பாலத்தில் போலீஸ் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூ 4000 மற்றும் சந்தைமேடு பகுதியில் மோட்டார் சைக்கிள்ளில் வந்தவரிடம் ரூ 25,000 தான் போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்ததாக புகார் வந்தது. மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் 19- ஆம் தேதி பிரபு என்பவரின் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை ஒருவர் பறித்து சென்றதாக புகார் வந்தது. சிசிடிவி பதிவுகளை பார்த்த போது ரோஷனை பகுதியில் வழிபறியில் ஈடுபட்டவர் என்று தெரிந்தது.

Advertisment

fake police thindivanam police identified and arrested

அவரை பிடித்து விசாரித்ததில் தருமபுரியை சேர்ந்த தாஸ் என்று தெரிந்தது. அவரிடம் இருந்து ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ரூ 29,200 யை பறிமுதல் செய்தனர். இவரை திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

fake police Tindivanam Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe