Advertisment

போலி போலீஸ் உதவி கமிஷனர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! எஸ்.பி.யின் அதிரடி நடவடிக்கை!!

Fake police assistant commissioner has been charged with thuggery

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையின்போது சைரன் வைத்த ஜீப்பில் வந்து போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறி மிரட்டிய சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அதன் பின் ஒரிஜனல் போலீசார் அதிரடி விசாரணை நடத்தியதில், அவர் போலி போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் என தெரியவந்தது.

அதனால் விஜயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜயன், பல்வேறு மாநில முதல்வர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் போலீஸ் உடையில் சுற்றித் திரிந்த புகைப்படங்களை வைத்து அவரை ஒருநாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்தனர் காவல்துறையினர். விஜயன் போலீஸ் அதிகாரி எனக் கூறி முகநூல் நட்பின் மூலம் பல பெண்களிடம் காவல்துறையில் பணி வாங்கித் தருவதாகவும் பல பெண்களை ஏமாற்றி பல லட்சங்களை வாங்கி பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

Fake police assistant commissioner has been charged with thuggery

Advertisment

அதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில் விஜயன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலி அசிஸ்டன்ட் கமிஷனர் விஜயன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலி உதவி கமிஷனரிடம் ஏமாந்த பெண்களிடம் ஒரிஜினல் போலீஸ் அதிரடி விசாரணை செய்ய களம் இறங்கியிருக்கிறார்கள்.

fake police dindugal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe