fake ghoest video viral on social media

ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், காவி உடையில் இருக்கும் சித்தர்திடீரென பறந்துசென்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு அருகே உள்ளது பிரப்பன்வலசை கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதே சமயம், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில்அந்த முகாமில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

Advertisment

அந்த முகாமிற்கு வெளியேயாரோ ஒரு நபர் விசித்திர குரலில் கத்துவது போல் இருந்துள்ளது. இதைக் கேட்ட நபர் ஒருவர்அச்சத்துடன் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்து பார்த்துள்ளார். அப்போதுவெளியே இருந்த வாகனத்தின் மீதுபறந்த நிலையில் ஒரு உருவம் இருந்துள்ளது. காவி உடையில் சித்தர் போல் தோற்றம் கொண்ட அந்த நபர்மிளிர்ந்த கண்களுடன்வானத்திலிருந்துபறந்து வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஜன்னல் ஓரத்தில் எட்டிப்பார்த்த நபரையும் பயமுறுத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நபர், இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 27 நொடிகள் கொண்ட இந்த வீடியோதற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ பார்ப்பவர்கள்பறக்கும் சித்தர் என கமெண்ட் செய்து வந்தனர்.

ஆனால், இந்த வீடியோவில், ஒரு பெண்ணும் இருக்கிறார். சந்தேகத்தின் அடிப்படையில்இந்த வீடியோவில் இருக்கும் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என்பதற்காகநாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான பூபதி என்பவர்நம்மிடம் பேசும்போது '' இந்த வீடியோ போலியானது. யாரோ வேண்டுமென்றே இதை சோசியல் மீடியாவில் பரப்பியுள்ளனர். இத்தகைய செயல்களால்பொதுமக்கள் அதிகளவில் அச்சப்படுகின்றனர்'' எனத்தெரிவித்துள்ளார்.