Fake order to get job in government school; Clerk arrested

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பேர்லின் வில்லியம் என்பவர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால் மகன் ராஜதுரை (36) இவர் பள்ளியில் பதிவு எழுத்தராக பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் ஆசிரியர் அரசுப் பணி வாங்கி தருவதாகக் கூறி குமராட்சி பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் ராஜராஜன் (34) மற்றும் ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பண்டித்துரை ஆகியோரிடம் இருந்து மொத்தம் 6 லட்சத்து 83 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பள்ளியின் நிர்வாகத்தலைவரான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா என்கிற அய்யப்பன் என்பவரின் கையொப்பத்தையும், அதன் செயலாளர் கையொப்பத்தையும் கொண்ட போலியான பணி ஆணையை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ராஜதுரையை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். பின்னர் அவர் பயன்படுத்திய கணினி ஒன்று பறிமுதல் செய்துள்ளனர்.