Fake nurse arrested in Rajapalayam

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தகுதியற்ற போலி மருத்துவர்களால் மக்களின் உயிர் பறிபோவது தொடரவேசெய்கிறது. ராஜபாளையத்தில், ஆக்னெஸ்ட் கேதரின் என்றபோலி செவிலியர், தனதேவநாதன் என்ற சிறுவனுக்கு காய்ச்சலுக்கு ஊசிபோட்டதால்அச்சிறுவன் இறந்துள்ளார்.

Advertisment

6 வயது சிறுவனான தனதேவநாதனுக்கு அலோபதி வைத்தியம் பார்த்து ஊசி போட்டதை ஒப்புக்கொண்ட ஆக்னெஸ்ட் கேதரின் வீட்டை சோதனையிட்ட போது, அலோபதி மருந்துகள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisment

விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல் அளித்தபுகாரின் பேரில்ஆக்னெஸ்ட் கேதரின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.