Fake medical treatment

புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பிரபாசங்கர். 48 வயதான டைலரான இவருக்கு குடல் வால்வில் பிரச்சனை இருந்துள்ளது. அதையடுத்து பிம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

ஆனால் அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்சூரன்ஸ் பணம் வந்த காரணத்தினால் மருத்துவமனை நிர்வாகம் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லி மருத்துவம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இறந்ததை மூடி மறைத்து மருத்துவம் பார்த்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிம்ஸ் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நீண்ட நேரம் நடத்தியதால் காவலர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் இன்சூரன்ஸ் பணம் 1.7 லட்சத்தை இறந்துபோன பிரபாசங்கர் குடும்பத்துக்கு வழங்குவதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Advertisment