Advertisment

அப்பட்டமாக கடை விரித்து கள்ள மது விற்பனை; வைரல் வீடியோ

 Fake liquor sold by open shop; viral video

'போதை மாற்றும் பாதை'‘போதை இல்லா தமிழகம்’ என எத்தனையோ தலைப்புகளில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சில இளைய தலைமுறையினரின் செயல் செய்திகளாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே அவை மலிவாகக் கொட்டிக் கிடப்பதுதான் சில நேரம் சமூக வலைத்தளங்களை அதிர வைக்கிறது. அண்மையில் கள்ள மது விற்ற வழக்கில் தாய் சிறை செல்ல, புத்தகப் பையுடன் சிறுவன் ஒருவன்கள்ள மது விற்றது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில்வெளியாகியுள்ளகாட்சிகள் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்பேரணாம்பட்டுஅடுத்தரெட்டிமாங்குப்பம்ஆற்றங்கரையோரம் சட்ட விரோதமாககள்ள மது விற்பனைஜரூராகநடைபெற்று வருகிறது. தினக்கூலிக்கு ஆட்களை வைத்து கல்லா கட்டும் அளவிற்கு விற்பனை நடைபெறுகிறது என்றால் பாருங்களேன். அந்தப் பகுதியில் கள்ள மது விற்பனைசெய்பவரிடம்பேசிக்கொண்டே இளைஞர் ஒருவர் மது வாங்கும்வீடியோகாட்சி வெளியாகியுள்ளது. அதில்,

Advertisment

மது விற்பவர்:''எத்தனைப்பா...”

இளைஞர்: “ஒன்னுகொடுதலைவாஃபர்ஸ்ட்டு...”

மது விற்பவர்: “அடரெண்டுவாங்கிக்கப்பா...”

இளைஞர்: “ஒன்னுகொடு தலைவரே...”

மது விற்பவர்: “அடரெண்டு வாங்கி போடேன். வயசுபுள்ளைங்கரெண்டுகுடிக்கிறதில்ல...”

இளைஞர்: “சரிதான்...நேத்துரெண்டுபோட்டேன்ஒன்னுமேதேரிலேயே...”

மது விற்பவர்: “சாப்பிட்டியாவயிறுநப்ப...இந்தா(என மதுபாக்கெட்டைகொடுத்து) நீயே வந்துசொல்லணும்போதைஏறிடுச்சுனு...'' என அந்தவீடியோஉரையாடல் இருக்கிறது.

 Fake liquor sold by open shop; viral video

இவர்களுக்குப் பின்புறம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடக்கும் காட்சிகள்தெரிகிறது. இப்படிஅப்பட்டமாககடை விரித்து கள்ள மது விற்பனை செய்வதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Drugs Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe