கோப்புப்படம்
நாகையில் போலி மதுபானம் தயாரிக்க உதவியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாகைமாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள நெய்விளக்கு பகுதியில்போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக கொடுக்கப்பட்ட புகாரில் போலீசார்விசாரணை மேற்கொண்டதில், போலி மதுபானம் தயாரிக்க உதவியஇளையராஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தொடர் விசாரணையில் போலி மதுபானம் தயாரித்தமகேந்திரன் என்பவரைபோலீசார்சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
எரிசாராயத்தைப் பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்தமகேந்திரனிடம் இருந்து போலி மது தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட 70 லிட்டர்எரிசாராயம், 700 மதுபாட்டில்கள்,ஸ்டிக்கர் ஆகியவைபோலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி மதுபானம் தொடர்பாக இருவர்தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட சம்பவம் வேதாரண்யம் நெய்விளக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.