கள்ளக்குறிச்சி சம்பவம்; உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில்உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் (40) என்பவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது.

kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe