சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: ஒருவர் கைது!!

சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலையை கண்டுபிடித்த காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பில் விழுப்புரம் மத்திய பபுலனாய்வுகூழு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.மோட்டார் சைக்கிளில் ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 Fake liquor factory discovery in Chidambaram: one arrested

அப்போது சிதம்பரம் அருகே உள்ள கருநாகரநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் சுந்தர் (26).என்பது தெரியவந்தது. இவர் சாராய வியாபாரி இவர் மீது சாராய கடத்திய வழக்கு உள்ளது. மேலும் போலீசார் விசாரித்தபோது. அவர் சிதம்பரம் பழைய புவனகிரி சாலை அருகே காமாட்சி அம்மன் நகரில் ஒரு மாடி வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வந்ததாக விசாரணை யில் தெரியவந்தது.

 Fake liquor factory discovery in Chidambaram: one arrested

பின்னர் அவரை அழைத்துக்கொண்டு சிதம்பரம் காமாட்சி அம்மன் நகருக்கு சென்றனர்.உடனே போலீசார் மாடி வீட்டில் முன்பக்கம் கேட்டை உடைத்து உள்ளே சென்று அறை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது, 3ஆயிரத்து 550 காலி மது பாட்டில்,மதுவுடன் 2 ஆயிரத்து 710 மது பாட்டில், கேன் 48, போலி மதுபாட்டில்களும் இருந்தன. இதுதவிர காலி மதுபாட்டில்கள், அதற்குரிய மூடிகள், புதுச்சேரி மதுபான வகை லேபிள்கள், அசல் மதுபான பாட்டில் போல் ‘சீல்’ வைக்க கையால் இயக்கப்படும் இயந்திரம் ஆகியவை இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரை கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.

arrest CHITHAMPARAM fake liquor police
இதையும் படியுங்கள்
Subscribe