Advertisment

கலெக்டர் பெயரிலேயே போலி ஃபேஸ்புக் கணக்கு... போலீசார் விசாரணை!

Fake Facebook account in the name of Cuddalore Collector

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்குத் துவங்கப்பட்டு இ-மெயில் மூலமாக, தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்ட ஆட்சியராக, சந்திரசேகர் சாகமூரி செயல்பட்டு வருகிறார். அண்மையில் 'Chandra Sekhar Sakhamuri IAS' என்ற பெயரில் முகநூலில் கணக்குத் துவங்கப்பட்டு, இ-மெயில் மூலமாகத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Advertisment

மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே இருப்பதால், அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் இதனைப் பார்வையிட்டு விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆட்சியரின் பெயரை தவறாகப் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு மூலமாகப்பதிவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், collrcud@nic.in., cudcollector@gmail.com ஆகிய மின்னஞ்சல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Cuddalore District Collector Fake
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe