Advertisment

ஒரு ஆசிரியைக்காக போலி ஆவணங்களை தயாரித்த அதிகாரிகள்...சிக்கலில் கல்வித்துறை !

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் பாரம்பரியம்மிக்கது அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார் ஹேமமாலினி என்பவர். இவர் கல்லூரியில் படித்தது பி.காம் என்கிற வணிகவியல் பாடம் மற்றும் அதே பிரிவில் பி.எட் படித்து முடித்துள்ளார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் டபுள் டிகிரி என ஆங்கிலப்பாடப்பிரிவு படித்துள்ளார்.

Advertisment

fake documents

2010 முதல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும்மே ஆசிரியராக தொடர முடியும் என்கிற நிலை. இந்நிலையில் டெட் தேர்வில் அதுவும் ஆங்கிலப்பாடத்துக்கு கலந்துக்கொண்டு தேர்ச்சி பெற்றதாக சொல்லி பணியில் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சுரேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்து, பின்னர் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு வாங்கி விசாரணை நடத்த உத்தரவிட்டபின் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் நடத்திய விசாரணையில், போலியான ஆவணங்களை தயார் செய்து, அதனை சுரேஷ்பாபு – இந்து கல்வி சங்கத்தின் உதவி தலைவர், ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பத்தூர் சாம்பசிவம், மாவட்ட கல்வி அலுவலர் திருவள்ளுவர் மாவட்டம் பரமேஸ்வரி, பிரிவு எழுத்தர் மாவட்ட கல்வி அலுவலகம் திருப்பத்தூர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் திருப்பத்தூர் கிரீணிவாசன், இடைநிலை இயக்குநரின் நேர்முக உதவியாளர், இடைநிலை இயக்குநர் அலுவலகம், சென்னை என அதிகாரிகள் துணையுடன் அந்த போலி ஆவணங்களை அங்கீகரித்து ஆசிரியராக பணியாற்ற உதவி செய்துள்ளார்கள்.

ஹேமமாலிணி பல ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி மாதம் சுமார் 80 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெற்று வந்துள்ளார். அரசாங்கத்தை ஏமாற்றி வேலை வாங்கி, சம்பளம் பெற்று நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என இந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்கிறேன் என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குற்றப்புலனாய்வுத்துறை.

இது தற்போது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் துணையுடன் இதுப்போல் இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள் போலியான ஆவணங்களை தந்து பணியில் சேர்ந்து கல்வி கூடங்களில் உள்ளார்களோ என தெரியவில்லை என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள் பலரும்.

dpi Fake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe