Advertisment

போலி மருத்துவர்கள் அதிரடி கைது; போலீஸ் ஐஜி எச்சரிக்கை

fake doctor issue related trichy central zone police ig warned

தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் நேரடி மேற்பார்வையில் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், போலீசார் மற்றும் மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து கடந்த 1-ந் தேதி முதல் போலி மருத்துவர்களை கண்டறியும் பொருட்டு அதிரடி சோதனை நடைபெற்றது.

Advertisment

இந்த அதிரடி சோதனையின் போது முறையாக மருத்துவப் பட்டயப் படிப்பு படிக்காமலும், போலி உரிமம் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 29 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டனர். இதில் புதுக்கோட்டையில் 4 பேர் , பெரம்பலூரில் 3 பேர், அரியலூரில் 4 பேர், தஞ்சையில் 5 பேர், திருவாரூரில் 10 பேர். நாகப்பட்டிணத்தில் 3 பேர் என 29 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. மேலும் பொது மக்களின் நன்மையை கருதி தொடர்ச்சியாக இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்படும். பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் பேருந்து நிறுத்தம் அருகே மூசா காம்ப்ளக்ஸில் ஒரு மெடிக்கல் கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காலை 6 மணி முதல் மருத்துவமனை செயல்படுகிறது, மாலை நேரங்களில் புத்தாநத்தம் மூசா காம்ப்ளக்ஸில் ஊசி போடப்படுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. திருச்சியில் அடிக்கடி இலவச சித்த மருத்துவ முகாம் நடத்துவதாககூறி தனது சித்த மருத்துவ சங்கத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சித்த மருத்துவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு திரியும் நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

police Pudukottai trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe