Advertisment

பிளஸ் டூ படித்துவிட்டு மருத்துவம்; கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

Fake doctor caught red-handed practicing medicine after completing Plus Two

திருப்பத்தூரில்பிளஸ் டூ மட்டுமே படித்துவிட்டு மருத்துவர் என பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது செண்டியூர். இந்த பகுதியில் பிளஸ் டூ படித்தவர் ஒருவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் எழுந்தது. நாட்றம்பள்ளி தலைமை மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக அங்கு வந்து மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் 'நயன்' என்ற பெயரில் செயல்பட்டு வந்த கிளினிக்கை ஆய்வு செய்தனர்.

Advertisment

விசாரணையில் பிஸ்வாஸ் என்ற அந்த நபர் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலியாக BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery) என பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. அவருடைய கிளினிக்கில் நடத்திய சோதனையில் சுமார் 2000 ரூபாய் மதிப்புடைய மருந்துப்பொருட்கள் சிக்கியது. பின்னர்போலி மருத்துவர் பிஸ்வாஸை இருசக்கர வாகனத்தில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். கிளினிக்கிற்கும்அதிகாரிகள் சீல் வைத்தனர்.

fake doctor natrampalli police thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe