Advertisment

கரோனாவுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது!!

 Fake doctor arrested for treating Corona

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அடுத்த ஜம்புகுளம் பகுதியில் ஒரு மருத்துவர் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக பொதுசுகாதாரதுறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

Advertisment

இராணிப்பேட்டை மாவட்ட கரோனா தடுப்பு அதிகாரி பிரகாஷ் ஐயப்பன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு கட்டிடத்தில் கிளினிக் இயங்கி வந்ததை கண்டறிந்தனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த ராஜா என்ற நபர் 8 வகுப்பு மட்டும் படித்து, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் பயன்படுத்திய மருந்துகளையும் பறிமுதல் செய்த மருத்துவ அதிகாரிகள் அவர் நடத்திவந்த கிளீனிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

Advertisment

 Fake doctor arrested for treating Corona

மேலும் மருத்துவ அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில், சோளிங்கர் போலீசார் போலி மருத்துவரான ராஜா மீது வழக்கு பதிவு கைது செய்து சிறையிலடைத்தனர்.கடந்த வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

arrest corona virus fake doctor ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe