போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக பெரியார் பல்கலைக்கழக டெலிபோன் ஆபரேட்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டெலிபோன் ஆபரேட்டராக சக்திவேல் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் இந்த புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த புகார் உறுதி செய்யப்பட்டதால் டெலிபோன் ஆபரேட்டர் சக்திவேலை சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.