கடந்த 11 ஆண்டுகள்இந்திய மொழிகளுக்கான வளர்ச்சி நிதியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி நான்காவது இடத்தில் உள்ளதைக் குறிப்பிட்டு காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்த விமர்சனத்தை வைத்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளபதிவில், 'சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது; தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!' என பதிவிட்டுள்ளார்.