Advertisment

இரண்டாம் திருமணத்திற்கு பெண் பார்த்தபோது சிக்கிய போலி வழக்கறிஞர்..! 

Fake Advocate Imayil caught in trichy

Advertisment

திருச்சி மாவட்டம், பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவர், தனது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அந்தப் பகுதியில் சுற்றியிருந்திருக்கிறார். இவர்,இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்காக பெண் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், இவருக்குப் பெண் தருவதாக ஒரு குடும்பத்தினர் முடிவுசெய்து, அவரைப் பற்றி விசாரிக்கச் சொல்லி அவர்களதுகுடும்ப நண்பரான வழக்கறிஞர் கங்காதரனை அணுகியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கங்காதரன், இஸ்மாயில் குறித்து விசாரித்துள்ளார். அதில், இஸ்மாயில் மீது 18 லட்ச ரூபாய் மோசடி வழக்கு ஒன்று இருப்பதும், அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால்வழக்கறிஞர் கங்காதரன், திருச்சி செஷன்ஸ் கோர்ட் நீதிமன்றக் காவல்துறையில் இஸ்மாயில் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தினார்கள்.

Advertisment

அந்த விசாரணையில், குளித்தலை தொகுதியில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு வழக்கறிஞர் முன்பு பணியாற்றியிருந்தார். அதே வழக்கறிஞர் கும்பகோணம் பகுதியிலும் பணியாற்றிவந்த நிலையில், அவருடைய பெயரை முகமது இஸ்மாயில் பயன்படுத்தி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும், அவரிடம் முறையான எந்த ஒரு உரிமமும் இல்லாததால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advocate trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe