Fainting prisoners in Trichy special camp!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தங்கவைக்க சிறப்பு முகாம் செயல்பட்டுவருகிறது. இதில் இலங்கை, வங்காளதேசம், சூடான், நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களை முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று 8 பேர் மயக்கம் அடைந்ததைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு மேலும் 5 பேர் மயக்கமடைய அவர்களையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து 8 பேர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Advertisment