Fainted students; Two incidents in one day

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும்முட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைச் சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரே ஒரு மாணவன் மட்டும் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய நிலையில், மற்ற மாணவர்கள் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களுக்கு சேமியா உப்புமா காலை உணவாக கொடுக்கப்பட்டது. உப்புமா சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், உப்புமாவை பரிசோதித்ததில் அதில் பல்லி விழுந்தது தெரியவந்தது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் ஆரணி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இப்படி ஒரே நாளில் தமிழகத்தில் இரண்டு இடங்களில் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.