Skip to main content

உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி- மக்களுக்கு கறிவிருந்து வைத்து அசத்திய வேட்பாளர்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் தான் போட்டியிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கறி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.


கடலூர் அருகே உள்ளது பரங்கிப்பேட்டை ஒன்றியம். சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஒன்றியத்தில் 25- வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் என்பவர் போட்டியிட்டார். இவருடன் அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

 Failure in local elections non veg candidate provide to peoples

தேர்தல் முடிவின் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற, திமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். திமுக வேட்பாளர் முத்து பெருமாள் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், சோர்வடைந்து விடாமல் அடுத்த நாளே துரிதமாக கட்சிப் பணியைத் துவக்கினார்.

இந்நிலையில் முத்து பெருமாள் தான் போட்டியிட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் ஊர் விருந்து என்ற பெயரில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரியாணியுடன் கூடிய கறி விருந்தைப் பரிமாறினார்.

இந்நிகழ்ச்சியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பிரியாணியுடன் கூடிய கறி விருந்தில் பங்கேற்று உணவு உண்டனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய முத்து பெருமாள், தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சரிவர சந்திக்க முடியவில்லை. அதனால் தேர்தலுக்குப் பிறகு அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன். ஊர் மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு கட்சிப் பணியாக கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததாகவும், அவர்களுக்கு ஊர் விருந்து என்ற பெயரில் விருந்து வைத்து பிரியாணி பரிமாறி மகிழ்ச்சி அடைந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறிய முத்து. பெருமாள், இதுபோல் இந்த ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊரிலும் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிராய்லருக்கு சாயம் பூசி நாட்டுக்கோழி என விற்பனை ; 22 கிலோ இறைச்சி அழிப்பு

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Selling broiler chicken dyed as country chicken; 22 kg of meat recover

 

அண்மையில் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் சிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறிப்பாக தரமற்ற அசைவ உணவுகளை பறிமுதல் செய்வதோடு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் ஆகிய தலைமையிலான அதிகாரிகள் குழு திடீரென திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள சாலையோர இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வில் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பிராய்லர் கோழிகளை வாங்கிவந்து  செயற்கையாக நிறங்களைப் பூசி நாட்டுகோழி என விற்பனை செய்தது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்டு விற்பனை செய்தது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பெண்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கோழி இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அவர்களை கடுமையாக எச்சரித்து நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள் எவ்வாறு தரமான முறையில் இறைச்சிகளை வாங்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

 

 

 

Next Story

ஷவர்மா உயிரிழப்பு எதிரொலி; இறைச்சி சப்ளை செய்தவர் கைது

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 Shawarma Casualty Echo; Meat supplier arrested

 

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்தத் தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தேனி, ஈரோடு, தருமபுரி எனப் பல இடங்களில் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய அசைவ உணவகக் கடைக்கு இறைச்சி சப்ளை செய்த இறைச்சிக் கடை உரிமையாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.