நீட் தேர்வு முடிகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மாணவர்களை பாதுகாக்கும் முயற்சியில் பெற்றோர்கள் உள்ளனர். திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீஒரு மதிப்பெண் குறைவாக வாங்கியதால் தூக்கில் தொங்கினார்.

failed

Advertisment

Advertisment

அதேபோலதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன்நகரை சேர்ந்த நம்பிராஜ் மகள் வைஷியா (17) பட்டுக்கோட்டை இசபெல் பள்ளியில் படித்து நீட் தேர்வுக்கும் தயாரானார். இந்த நிலையில் மாணவி நீட் தேர்வில் 4 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வியடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

neet

மாணவியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர். நீட் அரக்கனால் தமிழக மாணவிகளின் உயிர்கள் பறிபோய்க் கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது.