Advertisment

மாதொரு பாகனுக்கு தரும் சாகித்திய அகாடமி விருதுக்கும்,மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை:நாகராஜன்

மாதொரு பாகனுக்கு தரும் சாகித்திய அகாடமி விருதுக்கும்,
மத்திய அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை:நாகராஜ்

கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
Advertisment
நேற்று திங்கட்கிழமை(28.08.2017)புது டெல்லியில் சாகித்திய அகாடமி அலுவலக முன்பு பெருமாள் முருகன் எழுதிய”மாதொரு பாகன்”என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான “ONE PART WOMAN” என்ற நூலுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருதை அனிருத் வாசுதேவனுக்கு வழங்குவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு அகாடமியின் செயலாளர் சீனிவாசன் ராவ்வை சந்தித்து விருதை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய போது,அவர்கூறிய தகவல்கள் மத்திய அரசுக்கும்,சாகித்திய அகாடமி விருது வழங்குவதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக்கின.
Advertisment

v சாகித்திய அகாடமி என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு(autonomous body).

v விருதுக்கான நூலை தேர்வு செய்வது மூன்று எழுத்தாளர்கள் அடங்கிய குழு.

v இவர்கள் காங்கிரஸ் கால ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களைக் கொண்டு இன்றுவரை சாகித்திய அகாடமி இயங்கி வருகின்றது.இதிலுள்ள எழுத்தாளர்கள் முற்போக்கு எழுத்தாளர் என்ற பெயரில் இடதுசாரி சிந்தனையாளர்கள்.

v “ONE PART WOMAN”என்ற நூலின் மொழிபெயர்ப்புக்கான நூலை தேர்வு செய்தவர்கள் தமிழர் கலாச்சாரம் பற்றி அறியாத வெவ்வேறு மாநிலத்தின் எழுத்தாளர்கள்.

v இந்த விருது வழங்குவதில் பல பொறுப்பாளர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது அகாடமியின் சில பொறுப்பாளர்கள் பேச்சில் உணர முடிந்தது.

v மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் தமிழக மத்திய இணை அமைச்சரும் அகாடமி செயலாளரை தொடர்பு கொண்டு தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இந்த நூலுக்கு விருது வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கூறிய பின்னரும்,அகாடமியின் எழுத்தாளர் உறுப்பினர்கள் விடாப்படியாக விருது வழங்குவதை முயற்சிப்பது,இந்துமத நம்பிக்கையையும், புகழ்பெற்றக் கோயிலின் புனிதத்தை குறிவைத்து தாக்குவதோடு மத்திய அரசுக்கு,தமிழர்கள் மத்தியில் கெட்ட பெயரை உண்டு பண்ணும் முயற்சியே

v மத்திய அரசு இதுபோன்ற அமைப்புகளுக்கு சுதந்திரம் கொடுத்து ஜனநாயகமாக செயல்பட்டாலும்,அவர்கள் எல்லை மீறும் போது மத்திய அரசு தலையிடுவது மிகவும் அவசியம்.

v விருதை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழகத்திலிருந்து 200 பேர் வந்துள்ளோம்.எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.இது தொடர்ந்தால் 20,000 பேராக தமிழகத்தில் இருந்து திரண்டு வருவார்கள் என்ற செய்தியையும் அகாடமி செயலாளரிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளோம்.

v எனவே தமிழகத்தில் சிலர் இந்த விருதை மத்திய அரசு வழங்குவதாக திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பிக் கொண்டுள்ளார்கள்.இதை இங்கு கூடியிருப்பவர்கள் அனைவரிடத்திலும் சென்று கூற வேண்டும் என சிவானந்த காலனியில் பாரத் சேனா ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் G.K.நாகராஜ் பேசினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe