/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fact-check-art_0.jpg)
சமூக வலைத்தளங்களில், ‘ஆதாரில் கைரேகையைப் புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள்’ என்று தகவல்கள் (வதந்தி) பரபரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது முற்றிலும் பொய்யான தகவல். ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் (Authentication failure) குடும்ப அட்டைதாரர்களுக்குத் தனியே பதிவேட்டில் கையொப்பம் பெற்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண்கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கமளித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)