Advertisment

பிச்சை எடுக்கவைத்த பேஸ்புக் காதல்!!

முகநூல் மூலம் உருவான காதல் இறுதியில் உணவிற்கு கையேந்தவைத்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

மேற்குவங்கம் டார்ஜிலிங்கை சேர்ந்த 11 வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி காணாமல் போயுள்ளார். அவர் டியூசன் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் போலீசாரிடம் புகாரளித்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் நடந்து 7 மாதங்கள் கழித்து அண்மையில் அந்த சிறுமி ஒரு தொலைபேசியிலிருந்து தனது தாயிற்கு போன் செய்துள்ளார். தான் தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் எனும் இடத்தில் உள்ளதாகவும் உணவின்றி பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

facebook

இதன்பிறகு டார்ஜிலிங் போலீசார் மூலம் திருப்பூர் போலீசாரை தொடர்புகொண்ட பெற்றோர் அந்த சிறுமியை கைப்பற்றினர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எங்கள் மாநிலத்தை சேர்ந்த புஜன் குரங் என்ற இளைஞருக்கும் எனக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல நாங்கள் மொபைல் நம்பரை பரிமாறிக்கொண்டோம்.எங்கள் மாநிலத்தில் புஜன் குரங் இருந்தபோதுஒருமுறை சந்திக்க நேர்ந்ததுஅப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால் நான் வேலை செய்ய திருப்பூர் செல்கிறேன் என கூறி சென்றார். மேலும் நான் உன்னை திருமணம் செய்துகொள்ளகிறேன் எனக்கூறினார் புஜன் குரங் எனவே அவரை நம்பி வீட்டிலுள்ள பணத்தை எடுத்துக்கொண்டு தமிழகம் வந்தேன். அங்கு சந்தித்த இருவரும் கேரளா கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு உல்லாச சுற்றுலா சென்றோம். கையில் இருந்த பணம் தீர்ந்ததால் இறுதியில் வேலை தேட ஆரம்பித்தோம்.

Advertisment

facebook

திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தோம் ஆனால் எங்களுக்கு சரியாக வேலை செய்யவராததால் சரியான ஊதியம் கிடைக்கவில்லை. எனேவ வேறு வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தோம். சரியான ஊதியம் இல்லாததால் எங்கே நான் விட்டு சென்று விடுவேனோ என எண்ணிய புஜன் குரங் என்னை வீட்டில் அடைத்து அடித்தான்.

இறுதியில் சாப்பிட சரியான உணவின்றி இறுதியில் அருகிலுள்ள வீடுகளில் பிட்சை எடுக்கும் நிலைக்கு ஆளானேன் பிறகு அருகிலிருந்தவர்களிடம் மொபைல் வாங்கி எனது தாயிற்கு போன் செய்தேன்என உருக்கமாக கூறியுள்ளார். அவரை நேரில் சந்த்தித்த அவரது தாய் மகிழ்ச்சியில் அந்த கண்ணீர் வடித்தார். அவருக்கு புது உடைகள் வாங்கி தந்து அவரை சந்தோசப்படுத்தினார்.

படிக்கும் வயதில் முகநூல் சாட்டிங் டேட்டிங் என்று சீரழிந்து இறுதியில் உணவிற்கு கையேந்து நிலைக்கு தள்ளிவிட்டது இந்த முகநூல் காதல்.

cheating love Facebook
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe